மெளனம்…

This entry is part of 51 in the series 20031120_Issue

மோகன லட்சுமி


வார்த்தைகள் வாய்கால்கள் மீறி
வலம் வரத் துடிக்கும் போதிலும்,

புறம் சொல்லவே
பிறந்தவர்களிடமும்..

தற்பெருமை தொட்டிலில்
தானே ஆடியவர்களுக்கும்..

முத்துக்கள் உதிர்ந்து விடுமோ ?
வாய் திறந்தால்..
ஆராய்ச்சி கேள்விகளுக்கும்.

மெளனமே மாற்றாக
நான் வைத்து இருக்க,

என் மெளனத்தின் அடியில்
சிக்கி சிதைந்துப் போனதாம்
பல உன்மைகள்..!!

பதில் சொல்லப்படாமல்
தூக்கிலிட்டேனாம்
சில நியாய கேள்விகளை..!!

குற்றமாய் வழக்குரைத்தவருக்கும்,
வார்த்தையால் சீண்டியவர்கும்..
பதிலாய் என்றும்
முகத்தில் அறையும் என் மெளனம்.!

***********
MohanaLakshmi.T@in.efunds.com

Series Navigation