புரியாமல் கொஞ்சம்…

This entry is part of 51 in the series 20031120_Issue

வேதா மஹாலக்ஷ்மி


சில விஷயங்கள் மட்டும்
புரிவதேயில்லை….

நிலவின் களங்கம் போல்
என் நினைவில் தப்பிய நிம்மதி போல்
உனக்குள் காயம் பட்ட என் அடிவேரைப் போல்
நீ விலகி விலக்கிப் போனாலும்
உன் உயிரோடு ஒட்டிக்கொள்ள விரும்பும் என் மனசைப் போல்
தேடலே புரியாமல், உன் ஆழத்தில்
சுகம் சுகமாய் தொலைத்துவிட்ட என் எல்லாம் போல்…..

சில விஷயங்கள் மட்டும்,
எப்படியும் புரிவதே இல்லை…. இன்னும்கூட!!

piraati@hotmail.com

Series Navigation