எங்கே நமக்குள் சாதிவந்தது ?

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


—-
‘ஏண்டி கனகா ? என்ன செய்யற ? ‘
‘ஏங்க்கா ? ‘
‘சாதி ஊர்வலம்
சன்னாசிப் பையன்
ஆள்பிடிக்கிறான்
சங்கடப் படாம
ஐம்பது ரூபா ‘
‘எல்லாம் சரிக்கா..
எப்படி நான்
இந்த உடம்போட ? ‘
‘ீ சும்மா இரு..
எண்ணிக்கைகாக
என்னோடு வா…
வாயும் வயிறுமா -நீ
காயற கூத்த
பேயும் அறியும்! ‘
‘நீயும் நானும்
வேற சாதிக்கா! ‘
‘போடி போடி
போக்கத்தவளே
தேடும் பொழப்புக்குச்
சாதி ஏதடி ?
களை எடுக்கிறோம்
நாத்து நடுகிறோம்
கஞ்சி குடிக்கிறோம்
அஞ்சி வாழுறோம்
கட்டினவனுக்கு
முந்தானை விரிக்கிறோம்
காலையில் எழுந்து
கொல்லையில் ஒதுங்கறோம்!
எங்கே நமக்குள் சாதி வந்தது ?

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா