எனையாரென்று அறியாமல்..!!!

This entry is part of 44 in the series 20031113_Issue

கோச்சா


கூட்டுப் புழுவாய்
உன்னுள் நான்…
உணர்வும் உணவும்
பாந்தமாய் தந்து நீ-
உயிராக்கினாய்..!!!
பத்துத் திங்கள் பின்
சிறகடிக்கும்
பட்டாம் பூச்சியாய்
உலகில் நான்..!!!

மலர் போல்
ஆயிரம் சம்பவங்கள்
தேனாய் ஊறிடம் அதில்
அனுபவங்கள்..!!!

ஒடி ஓடிப்
பின் களைத்து
வீடு சேர்ந்தேன்..!!

முற்றத்தில் கால் நீட்டி
படுத்தேன்..!
தலை மேல்
இதமாய் ஒளி தரும்
அழகு நிலா…!!!
திறந்திருந்த வாசல்
கதவு வழி
வழிந்துவரும் தென்றல்..!!
எல்லாம் சுகம் தான்..
இருந்தென்ன…
தேனுண்ட களைப்பில்
இதயம் படபடப்புடன்…

சுருண்டு உன்னுள்
எனையாரென்று
அறியாமல்..
நிம்மதியாய் நானிருந்த
அந் நிலை
மீண்டும் வேண்டும்-
அன்னையே..!!!
———–
gocha2004@yahoo.com

Series Navigation