காதலாவது, கத்திரிக்காயாவது!

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

ஜோதிர்லதா கிரிஜா


(முன் குறிப்பு – பொதுவாக, பிறர் சொல்லும் எதையும் நான் இதுகாறும் கதையாக எழுதியதில்லை. ஏன் ?
‘கவிதை’ யாகவும்தான். னால், பல்லாண்டுகளுக்கு முன்னர் எனக்கு வந்த குமுறல் கடிதம் ஒன்றைக் கவிதையாக்கிக்
கீழே தந்துள்ளேன். விதி விலக்கான
சகோதரர்கள் சினமுற வேண்டாம்.)

பள்ளியில் படித்த காலத்தே பேரழகியாய் ஒளிர்ந்திட்ட தன் மீது
புள்ளிவைத்த அவன் மீது அவளுக்கும் வந்தது சை;
‘மணந்தால் உனை மட்டுமே மணப்பேன் நான் – இன்றேல்
பிணம்தான் நான்’ என்றபோது துடித்தது அவன் மீசை!

ஊர்விட்டு ஊர் சென்று கல்லூரி சேர்ந்த பின்னும்
வேர்விட்டு மேன்மேலும் வளர்ந்தது அவர்தம் காதல்;
படிப்பு முடிந்து திரும்பியதும் பெற்றோரிடம் தம் எண்ணம்
துடிப்புடன் அவர்கள் கூற, வெடித்தது மோதல்.

அஞ்சி நடுங்கினர் சேதி கேட்டு அவள் வீட்டார் அணு அணுவாய் –
கெஞ்சினர் தம் மகளை – “மகளே, நீ அவனை மறந்திடுவாய்!
கிஞ்சித்தும் கவுரவம் இல்லாத நாம் தாழ்த்தப்பட்ட அரிசனங்கள்
கஞ்சிக்கும் வக்கற்ற, கவடு சூது என்பதாய் ஏதும் ‘அறியா’ சனங்கள்.

மேட்டுக்குடி மக்களுங்கள் சாதி பொருந்தா இக் காதலுக்கு
வேட்டுவைக்க முனைந்திடுவார்; வெகுண்டு எழுந்திடுவார்;
பச்சைக் கொடி காட்டாது வழி வகுப்பார் மோதலுக்கு;
இச்சையைக் களைந்தவனை இன்றே மறந்திடுவாய்.”

நொடிப் பொழுதில் அவன் வீட்டார் திகைத்துப் பின் திடுக்கிட்டார்;
கடிதப் பரிமாற்றம் அறிந்து முதலில் திகைத்துத் துடித்தாலும்,
‘பிடி இந்தா!’ என்று பெரும் பணம் கொடுத்துவிட்டால்,
விடுவாள் அவள் இவனை உடனே’ என்று சடுதியில் கணக்கிட்டார்.

“கடிதங்கள் கை மாற, ‘விட்டது சனியன். பணமும் வந்த’தென்று
நொடியில் மனம் மாற, விட்டிடுவாள் உன்னை யவள் உடனே இன்று!
பிடிவாதம் விடு மகனே!” என்று பல்வேறு அறிவுரைதான் பகன்று
கடிவாளம் போட வந்தார் அவன் பெற்றோர், கண்ணீரில் கரைந்து நின்று.

நிலம், நீச்சென்று சொத்தேதும் இல்லாது போனதனால்,
புலம் பெயர்ந்து அவள் பெற்றோர் உயிர்க்கஞ்சி வேறிடம் சென்றார்கள்;
சலசலப்புக் கஞ்சாத பனங்காட்டு நரிகளாய்க் காதலினால் – இருவருமே
பல கடிதம் மேன்மேலும் பரிமாறிக் கொண்டார்கள்.

று ண்டுகள் இலவு காத்த கிளிகள் போல் இருவரும் இருந்த பின்னே,
மாறுகின்ற காலத்தை மறுதலிக்கும் மடையர்களாய்ச்
சீறுகின்ற பெற்றோரைச் சீ யெனவே ஒதுக்கித் தள்ளி
வேறு ஊர் சென்றங்கே குடித்தனம் வைத்தார்கள்.

காத்திருந்து வெல்லுகின்ற காதலுக்கு ஈடேது ?
பூத்ததுவே அவள் வயிற்றில் பச்சிளங் கருவொன்று!
பத்தே மாதங்களில்! பரவசமுற்றாள் அவள்! னால் அவன் சொன்னான் –
‘இத்தனை அவசரமேன் ? வேண்டாமிது. கலைத்து விடலாம்’ என்று.

அவள் சொன்னாள் –
‘இப்போது வேண்டாமென நீ நினைத்தால் – அந்நினைப்பில்
தப்பேது மில்லைதான்! உன் எண்ணம் புரிகிறது! னாலும்,
ரப்பரால் அழிப்பது போல் அழிக்க இதுவென்ன வெறும் எழுத்தா ?
அப்பனே! உன் யோசனையால் என் உள்ளம் பற்றித்தான் எரிகிறது!’
‘கொஞ்ச நாள் நிம்மதியாய் இருக்கலாமே! பிக்கல், பிடுங்கலின்றி!’என்று அவன்,
கெஞ்சுதலாய்க் கேட்டு அவளை மாற்ற முயல, அவள் முறைத்தாள்;
‘சஞ்சலம் ஏதும் எனக்கில்லை, நான் பெற்றே தீருவேன்!’ என்றுரைத்தாள்.
அஞ்சவில்லை அவள் பிள்ளைப் பேறு பற்றி என்றறிந்து அவனும் அத்தோடு விட்டுவிட்டான்.

மணமாகி றாண்டு முடியு முன்னர் மணிமணியாய் மகவுகள் நான்கு பிறந்தன.
மண்ணில் விழுந்த மறு கணமே அவற்றில் இரண்டு விண்ணுக்கு அவசரமாய்ப் பறந்தன.
பொன்னான அவள் மேனி நிறமிழந்து, வலுவிழந்து தளர்ந்தது;
‘என்ன வாழ்க்கை இது!’ என்ெறெண்ணி அவள் உள்ளம் உலர்ந்தது.

கருத்தடை அறுவைக்கு அச்சம் – நூற்றுக்கு இரு பெண்கள் இறப்பதனால்; .
கருப்பையில் புண்ணும் புற்றும் வருமோ என்று நியாயமாய் ஒரு மருள்;
விருப்பமின்றியே உறவுதான் கொண்டாலும் விளைவின்றிப் போய்விடுமோ ? –
சுருக்கமாய்ச் சொல்லப் போனால், அவள் அவனுக்கு ஒரு நுகர்பொருள்!

‘நீங்கள் செய்துகொள்ளுங்களேன், பின் விளைவு ஏதுமற்ற சிகிச்சை ?
நீங்கிவிடுமே நம் சுமைகள்!’ என்று சொல்லியும் பார்த்துவிட்டாள்;
ஓங்கி ஒர் அடி அடித்துவிட்டான் – ‘முடியாது’ எனும் ஒரே சொல்லால்!
தாங்கிப் பெற அவள் இருக்கையில், முதன்மை பெற்ற்து அவன் இச்சை!

‘உறை யணிந்தேனும் வாருங்களேன்’ என்றும் சொல்லிப் பார்த்தாள்; எங்கே கேட்டான் ?
இரை தின்னும் பருந்துக்கு இரை பற்றி என்ன கவலை ? “அதை ” யணிந்து கொள்வதனால்,
குறைப்பட்டுப் போகிறதாம் அவன் இன்பம்; கூறிவிட்டான் வெட்கமற்ற கூர் கெட்டான்!
முறைாயிட்டும் பயனிலையாதலால் “தலையெழுத்தே” என்று தணிந்து போனாள்.

றாண்டு காத்திருந்து அவள்தன்னை மனந்ததனால், தன் மீது அவனுக்கு
றாத காதலென்று ர்வமாய் அதுகாறும் என்ணி இறுமாந்திருந்தாள்;
மாறாத மனத்தினன், மாசற்றான் என மதிப்பிட்டு மகிழ்ந்திருந்தாள் – னால்,
வேறேதுமில்லை காமம் தவிர அவனுக்குத் தன் மீது எனக் கண்டு நொந்து போனாள்!

மருத்துவரும் எச்சரிக்கை விடுத்துவிட்டார் – இனியும்
கருத்தரித்தால் தாங்காது உடம்பு என்று.
தடுத்துவிட்டாள் அவளும் ஓர் று மாதம்; அவனைத் தனியாய்ப்
படுத்துறங்க வைத்துவிட்டாள் – தற்காத்துக்கொண்டுவிட்டாள்!

னால் –
உடம்பு சற்றே தேறியதும், உறுதியாகவே மாறியதும்,
தடம் புரண்டு ஒரு நாளிரவில் அவன் அவளை அசட்டுச் சிரிப்போடு
உடும்பாய்ப் பற்றிக் கொண்டிடவே, கண்ணீருடன் அவள் தன்னை
விடும்படி அழுது புலம்பி வேண்டி நின்றாள்.

‘கருத்தரித்து மறுபடியும் அவர் முன் போய் , நின்றால்
மருத்துவர் சிரித்துக் கேலி செய்வார்’ எனக் கூறி அவள்
‘உருக்குலையும் என் மேனி, வேண்டாமிது’ என்று
உருக்கமாய் விடுத்தாள் தன் வேண்டுகோளை.

‘தடை’ யேனும் செய்துகொண்டு அதன் பின்னர் வாருங்களேன்’ என்று
தடுக்கப் பார்த்தாள்; தள்ளிப் பார்த்தாள்; முடியவில்லை;
கடைக்குப் போய் ‘அதை’ வாங்கிவர அவனுக்குப் பொறுமை இல்லை;
கடுப்போடு அவளைத் தள்ளியவன் கெஞ்சலும் கொஞ்சலுமாய்க் “கற்பழித்தான்”.

களித்து முடித்த பின் அவள் விழியோரம்
துளித்த கண்ணீரைத் துடைத்தவனாய்த்
துளியும் மனச்சாட்சி யற்றவனாய்
‘அழித்துவடலாம் கருவுற்றால், அழாதே, ’ என்றான் றுதலாய்.

வானுக்கும் பூமிக்குமாய் வாய் பிளந்து காதல் பேசும்
ணுக்கு இருப்பதெல்லாம் காமம்தான் என அறிந்த பின்னே,
“ணுக்குப் பெண் மீது காதலெனில், வீணுக்கு இத்தனை பிள்ளைகள் பிறப்பது ஏன் ?” என
ஞானமாய் ஒரு கேள்வி அவளுள் கோபமாய்க் கிளம்பியதில் அதிசயம்தான் என்னே!

jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா