முனி.

This entry is part of 59 in the series 20031106_Issue

அருண்பிரசாத்.


கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும்
கவனிக்கத் தவறுவதில்லை
அந்த புளியமரத்து முனியை.

மழை ஓய்ந்தும் ஓயாத
இருள் கசியும் மாலைகளில்
மரத்தை உற்று நோக்க
புலப்படும் முனியின் இருப்பு.

நெஞ்சைப் பிசைய வைக்கும்
அதன் ஓங்கரிக்கும் ஓலங்கள்
என் வாசலை வந்தடைகின்றன.

மரத்தின் கிளைவழியே
அனைத்து இலைகளிலும்
பரவி சொட்டுகிறது
பல்லாயிரமாண்டு மூப்பு கொண்ட அதன்
இடுங்கிய கண்களில்
இருந்து வழியும் கண்ணீர்

மானுட கவலைகளும்
முனியின் கவலைகளும்
காலவிகிதங்களில் மட்டுமே வேறுபடுகின்றன.

அருண்பிரசாத்.

everminnal@yahoo.com

Series Navigation