மதி

This entry is part of 39 in the series 20031016_Issue

பவளமணி பிரகாசம்


வைத்துக் கொண்டேன் வையகத்து வைரங்களை என் வீட்டில்,
பதித்துக் கொண்டேன் என் மணி மாளிகை முற்றத்தில்,
பகைத்துக் கொண்டேன் வானத்து தேவர்களை, தேவிகளை,
செதுக்கி என்னை சிறிதாக தேய்க்கிறார், மறைக்கிறார்.

புதிதாய் மெல்ல வளர்கிறேன், முழுதாகிறேன் மறுபடியும்,
துத்ித்தென்னை பாடும் கவிஞரும், காதலரும், மழலையரும்,
குதித்தெழும்பும் பித்தாகிப் போன கடலலைகளும்,
மதியென்னை மதிக்கின்ற ஒரேயொரு காரணத்தால்.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation