நீ இருக்கிறாய்!

This entry is part of 39 in the series 20031016_Issue

கற்பகம்-ரமணா


நீ இருக்கிறாய்!
நிஜமாய், நிச்சயமாய், நிரந்தரமாய்.
நீ என்றென்றும் இங்கே இருக்கிறாய்!
விரிவாய், தெளிவாய், வெளிச்சமாய்.
இனித் தேட ஏதுமில்லை,
நீ இருக்கிறாய்,
அக்கறையாய், பரிவாய், சரணாலயமாய்!
இனி வேண்ட ஏதுமில்லை!
நீ இருக்கும் சுதந்திரத்தில்,
சுமையின்றி நடக்கிறேன்!
ஆனால், தெரிந்து கொள் கண்மணியே,
என் வழி, வருங்காலம், வாழ்க்கை மட்டுமல்ல நீ,
என் சகலமும் நீயே!
நான் நானாக இருக்கிறேன்,
ஏனெனில் நீ இருக்கிறாய்
karpagam610@yahoo.com
!

Series Navigation