கேடயங்கள்

This entry is part of 39 in the series 20030925_Issue

ஸ்ரீனி.


வீசப்போகும் வார்த்தைகளுக்காய்
ஏந்தப்படும் கேடயங்கள்,
இவை
வீசுபவரை வீசுமுன் தாக்கும்
விபரீத ஆயுதங்கள்.

எய்தப்படாத அம்புகளுக்காய்
இதயம்
காயம்பட்டு நிற்கும் வில்லாளிகள்,
இருப்பினும்
ஏந்தப்படும் கேடயங்களை
இவர்
இன்னும் இறக்கி வைத்தபாடில்லை.

காகித வாளூக்கும்
உலோக வாளுக்கும்
வித்தியாசம் அறியாதவர்,
இவர்தம்
கற்பனை உலகத்தில்
கேடயங்களும் ஆயுதங்கள்.

இனியேனும்,
இரும்புக் கவசம் அணிந்த இதயங்களை
சற்றே தளர்த்தி வையுங்கள்
பரஸ்பரம் மூச்சுக்காற்றை பரிமாறும்
இனத்தவர் நாம்.
இதயங்களூக்காய் ஒரு விதி வேண்டாம்.

– ஸ்ரீனி.

Srinivasan.Ramachandran@in.efunds.com

Series Navigation