அவளும் மல்லிகையும்…..

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

மதியழகன் சுப்பையா, மும்பை


*
வாங்கிச் சென்ற
மல்லிகைப் பூவை
வேண்டாம் என்ற போது

ஏன் ? என்று கேட்க வில்லை

வீசி எறிந்து
கோபப்படவில்லை

கசங்காமல் வீட்டிற்கு
எடுத்துச் செல்வது பற்றி
சிந்தித்திருந்தேன்

அடுத்த சந்திப்பின் போதும்
மல்லிகையுடன் வருவேன்.
————————————————————————-

*
ஜாக்கெட் ஊக்கை
மாட்டிக் கொண்டிருந்த
உன் கைகள்
உதிர்ந்த மல்லிகைகளை
பொறுக்கிய என் கைகளை
தட்டி விட்டது
காரணம் சொல்லாமல்
அப்படி செய்யக் கூடாது என்று
பாவாடை நாடாவை இறுக்கினாய்
ஆனாலும்
வாசனை மூளையிலும்
மல்லிகை புத்தகத்திலும்
பத்திரமாய் இருக்கிறது.

————————————————————————-
*
ஒரு முறை
தலை மணக்க
மல்லிகை சுமந்து வந்தாய்
கை கனக்க
மல்லிகை சுமந்து நானும்

இன்னொரு முறை
வெறுங்கூந்தலோடு
வந்திருந்தாய்
கையும் பையும்
வெறுமையாய் நான்.

————————————————————————-

*
இன்றைக்கு
வேண்டாமென
உதட்டில் பூசிய
என் எச்சிலை துடைத்தாய்
காரணம் கேட்டதற்கு
தலையில் கொத்தாய்
மல்லிகை காட்டினாய்
வீட்டிற்கு தூரமென
என்னையும்
தூரம் வைத்தாய்.

————————————————————————-
*
உன் மீது
சவாரி செய்ய
நான் வாங்கி வரும்
பயணச் சீட்டுதான்
மல்லிகைச்சரம்
எனக் கிண்டல் செய்வாய்
என் இடுப்பில் அமர்ந்த படி.

————————————————————————-
*
கட்டிலெங்கும்
மல்லிகை பரப்பி
மல்லாந்திருந்த உன்
யோனி முகர்ந்து
முத்தமிடுகையில்
மல்லிகைக் காடானது
மனசு.
————————————————————————-
madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா, மும்பை

மதியழகன் சுப்பையா, மும்பை