‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

சித்தகவி



தான் தோன்றி கடவுள்

உன் உள் கடந்து
உன்னுடைய ‘நான் ‘
‘தான் ‘ ஆகும் பொழுது
தோன்றும் அந்த தாந்தோன்றி
‘கடவுள் ‘.

காதல்

நான் என் உள் கடந்து ‘தான் ‘ ஆகும்பொழுது,
நீயும் உள் கடந்து ‘தான் ‘ ஆனால் வரும் அமரக்காதல் நிலை.
அந்நிலையில் ‘நீயும் ‘ இல்லை ‘நானும் ‘ இல்லை
ஏகம் அனைத்தும் நாம்
நாம் தான் எல்லாம்
தான் ஆகி உணர்வோம்
ஒருவருள் ஒருவர் நாம் என்று
நாம் ‘தான் ‘ என்றும், ‘தான் ‘ நாமென்றும்


பிரிவு

‘நான் ‘ ‘நீ ‘ என்ற நிலையில் தான் பிரிவு;
தான் என்ற நிலையில் பிரிவென்பது ஏது ?
இதோ நீ இங்கே என்னருகில்;
அதோ நான் அங்கே உன்னருகில்;
நீ எனக்குள், நான் உனக்குள்;
இருந்தாலும் கொடு ஒரு முத்தம்.


இங்கு ‘நான் ‘ என்பது ‘தன்னலம் ‘ மற்றும் சுயம் சார்ந்த நிலைகளை குறிக்கும். ‘தான் ‘ என்பது தன்னலம் அற்ற சுயம் இழந்த இயற்கை சார்ந்த நிலைகளை குறிக்கும்.
msksam@hotmail.com

Series Navigation

சித்தகவி

சித்தகவி