என்று உனக்கு விடுதலை

This entry is part of 36 in the series 20030815_Issue

இளந்திரையன் கனடா –


காற்றின் அசைவுக்கும்
சருகின் ஒலிப்புக்கும்
வயிறு குளிர்ந்து
வாசல் பார்த்து

உதிரம் சொரிந்து
ஜனனம் தந்து
உள்ளம் மகிழ்ந்து
தொடரும் கதையில்

அடுப்பு ஊதி
அக்னி குடித்து
வயிறு காய்ந்து
வம்சம் வளர்த்து

சவுக்கு நுனியின்
நொடித் துடிப்பில்
சகலதும் மறந்து
சரணம் அடைந்து

உலகம் வாழ
உன்னை அழிக்கும்
அம்மா என்று
உனக்கு விடுதலை

Ssathya06@aol.com

Series Navigation