சிற்பிகளின் கற்பனைக்கு!

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

சி. ஜெயபாரதன், கனடா


நேற்றுக் கண்ட
பகற் கனவில்
பளிச்சென விண்மீனாய் மின்னிச் சென்ற
மின்மினியைப் பற்றி
நீரூற்றி, உரமிட்டு
ஊது!
உப்பி எழுந்து,
கரு
மயிற் தோகை போல் விரிந்து
பரதக் கலை புரியும்!
அண்ட வெளியில் பவனி செல்ல
கற்பனைக்குச்
சிறகுகள் உள்ளனவா ?
பளுவைச்
சுமந்து அன்ன நடையில்
நத்தை
நகர்கிறதா ?
அல்லது
பரி இழுத்துச் செல்கிறதா ?
மிதக்க விட்டால்
ஆறோட்டமே
தூக்கிச் செல்கிறதா ?
அன்றி
துடுப்பால் தள்ளித் தள்ளிப்
படகு
நீந்த வேண்டுமா ?
உரலைச்
சுற்றி
அரைத்த மாவை அரைக்கும்
செக்கு மாடுகளை
அவிழ்த்து விடு!
பறவை உயரத்தில் பறக்கலாம்!
தளம் மீது ஓடலாம்!
முன்னோக்கித் தாவலாம்!
அல்லது
பின்னோக்கி மீளலாம்!
பயணம்
நிற்கும் முன்பு
மலை மீது ஏற
ரயிலின் கொதி உலையில்
ஆவி உள்ளதா ?
முடிவில்
குகையைத் தாண்டி வெளியேறும்
எஞ்சின்
நிலையத்தில் நின்று
விடிகிறதா
புதிர் ?

*************
jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா