இறுதிவரை….

This entry is part of 57 in the series 20030717_Issue

வேதா


உனக்கும் எனக்குமான
ஒப்பந்தத்தை உறுதிபடுத்தியது
உன்
ஒரு துளி கண்ணீர்!

சுக நரம்புகளில்
சோகத் தீயணைக்க,
சுடர் தொடுத்தேன், உன்
கரம் பிடித்து !!

சொடுக்கிவிட்ட பம்பரமாய்
சுழன்றேறிய காலம்
கரைத்தது உன் சுவாசத்தை
சுகம் சுகமாய் …
என் உயிர் மூடிச்சில்…

உன் விரல் வீணையில்
விடிய விடிய இசைத்திருந்தேன்
வித்தியாசமாய், சில ராகங்களை..

என் சேயாக, நீயாக,
மடியில்
தாலாட்ட மனம் மலர்ந்தேன்
மறக்கவே முடியாதபடி!

உன் இதயத்துடிப்பை எனக்குள் கோர்த்தபடி
இன்பமாய் கலந்திருந்தேன்
ஒவ்வொரு நிமிஷத்திலும்!

இனியெல்லாம்…
இந்தத் தருணங்கள் துணைவருமோ ?
என் உயிரின்
ஈரம் காயும் வரை…!!

***
veda
piraati@hotmail.com

Series Navigation