அழகு
அனந்த்
காட்சி 1.
… மண்மகளின் சிரிப்பொலியும் வான்மகளின் பேரொலியும்
… வண்ணமுறக் கலந்தொலிக்கும் வனமதனில் மண்டிநின்று
… கண்நிறைக்கும் குளிர்தருவும் கவின்மலரும் காண்பவரை
… விண்ணுலகை வெறுத்திடவே வைத்ததெனில் வியப்பில்லை
காட்சி 2.
… அத்தகைய கானகத்தில் அழகுமகன் கதைத்தலைவன்
… நித்திலத்தின் ஒளியென்ன நீர்கொண்ட மடுவொன்றில்
… சித்திரத்தில் வரைந்ததெனத் தெரியும்தன் உருவத்தை
… நித்தியமும் தான்பார்த்து நெகிழ்ந்திங்ஙன் கூறிடுவான்:
… ‘புவியுதித்த நாள்முதலாய்ப் புகல்வதற்கு இன்றுவரை
… எவரேதான் பிறந்துள்ளார் எனக்குநிகர் எழிலோடு ?
… செவிகுளிரப் புகழ்கின்றார் சேர்ந்தென்னைக் காண்பவர்கள்
… அவையெல்லாம் உண்மையென யானறிவேன் ஏனென்றால்:
… சீரான முகமதனில் சிரிக்குமிரு கண்களுக்கு
… நேராவேன் நானென்று நிமிர்ந்துநிற்கும் நாசி;எனைப்
… பாரென்று பறைசாற்றும் பல்வரிசை; பாங்காக
… ஓரத்தில் நின்றழகை ஓங்கவைக்கும் செவியிணைகள்;
… தேக்கினிலே செய்ததெனத் திகழுமென்றன் தேகம்;எழில்
… தேக்கிநிற்கும் கைகால்கள்; திரண்டுருண்ட தோள்கள்இவை
… தூக்கியெனைப் பேரழகுச் சொக்கனென வைத்ததைநான்
… நோக்கிடவே விரைந்திடுவேன் நாளுமிந்த மடுவிதற்கு ‘
காட்சி 3.
… யாரும் அறியா வகையினிலே அழகன்அவனும் தினந்தோறும்
… நீரில் தெரியும் உருவழகில் நெஞ்சம் மகிழ்ந்து நெகிழ்ந்திருப்பான்
… நேரில் எவரும் நெருங்கவிடான் நேர்ந்த தொருநாள் அவ்விபத்து
… வேரை இழந்த மரம்போல விழுந்தான் மடுவில் உயிரிழந்தான்
காட்சி 4.
… வானில் திரியும் புள்ளினமும் மதியும் விண்மீன் கணங்களொடு
… கானைக் காக்கும் தேவதையும் கலங்கி அழுதாள் அவனிழப்பில்
… ஏனிக் கொடுமை எனப்புலம்பி ஏகி விரைந்தாள் மடுவருகே
… மோனம் கலைத்து மடுப்பெண்ணின் முழங்கும் அழுகை செவியுற்றாள்:
… தேனின் இனிய மடுத்தண்ணீர் துவர்க்கும் உப்பாய் மாறத்தன்
… மேனி குலுங்க வேதனையால் விம்மல் நோக்கி அவள்கேட்டாள்:
… ‘நானிவ் வண்ணம் அழுவதுபோல் நங்காய்! நீயேன் அழுகின்றாய் ?
… போன அழகன் பொன்னழகைப் பருக வியலா தெனநினைத்தோ ? ‘
… ‘அம்மா என்ன புகன்றீர்நீர் ? அழகா ? அவனா ? அறியேன்நான்!
… சும்மாக் குனிந்து எனைநோக்கும் சோம்பல் இளைஞன் அவனன்றோ ?
… இம்மா நிலத்தில் என்னழகை இதுநாள் வரையில் கண்டுவந்தேன்
… அம்மா னிடனின் கண்ணில்நான்; ஐயோ! இனிமேல் என்செய்வேன் ? ‘
நார்ஸிசஸ் என்னும் கிரேக்க அழகனின் கதையை Paulo Coelho-வின் The Alchemist என்னும் நூலின்
முன்னுரையில் கண்டதுபோல் மாற்றியமைத்தது. மூலக்கதை காண:
http://homepage.mac.com/cparada/GML/Narcissus.html
***
ananth@mcmaster.ca
- கால பூதம்…
- காமராஜர் 100
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10
- குறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)
- பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்
- வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா!
- கடிதங்கள்
- மீண்டும் பிறவி வேண்டும்
- அன்பே வெல்லும்
- ஒரு பூட்டுக்குப் பின்னால்….
- ஜெனிபர் லோபஸ்:
- ஊர்க்கதை
- முக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்![பெருங் கதை]
- உலக அரங்கில் தமிழ் இலக்கியம்
- பாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station
- விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி
- அறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)
- இறுதிவரை….
- மனம்
- வேடிக்கை உலகம்
- விமரிசனம்
- மழை
- அழகு
- காதல் கடிதம்
- கல்யாணப் பயணம்
- ஆதங்கம்!
- அரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி ?
- வாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)
- ஸுகினி சட்னி (Zucchini chutney)
- தமிழர் உணவு
- இருதலைகள்…
- எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை
- பசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து
- விடியும்! நாவல் – (5)
- திரிசங்கு
- ஒண்டுக் குடித்தனம்
- அழகான ராட்சசி
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2
- விலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)
- மானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)
- ‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்
- கற்பனை
- சா. கந்தசாமியின் படைப்புகள்
- கோபத்துக்கும் கோபம் வரும்
- இரண்டு கவிதைகள்
- ‘திரும்பிப் பார்க்கின்றேன் ‘
- Langston Hughes கவிதைகள்
- அஞ்சாதே! கெஞ்சாதே!
- விமர்சனத் தீ
- வருத்தம்
- மருதாணி
- பிழைக்கத் தெரிய வேணும் கிளியே!
- நீதித் தேவதையே நீ சற்று வருவாயா ?
- உறைவிடம்
- மரக்கூடு
- காலம்