மரக்கூடு

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

புஷ்பா கிறிஸ்ரி


வானவீதியை வலம் வரும்
வண்ணப் பச்சைத் தூரிகைகள்.
கிளை விரல்களை நிறைத்து
நிழல் தந்து பச்சை இலைகள்

மேகத்தின் மோகனத்தில் மழை சிரிக்க
மேனியெங்கும் செழிப்பு கண்டு விரிக்க
வேர்கள் நீட்சி காணும் நீர்குடிக்க
சீர்கொண்ட பசுமைச் சமுதாயம் பிறக்கும்

தென்றலின் தாலாட்டில் இலைகள் அசைய
கடுந்தென்றல் புயலாகி கிளையை முறிக்க
உடலெல்லாம் வெடித்துச் சிதறி தெறிக்க
உடல் சாய்ந்து மரம் கீழே விழும்

பூக்களைப் பிரசவித்து காய் கனி தந்திடும்
பூஜைக்குரிய பிறவிகள் தான் மரங்கள்
பசுமைத் தீபங்கள் இளமைத் தாகங்கள்
காசு கொடுத்து வாங்கிடும் தளபாடங்கள்

தென்னை இளநீரும் தேய்காயாய் மாறும்
வாழை இலையும் குலையாகி காய்க்கும்
பலாமரத்துக் காயும் முட்களிலே வாசம்
பச்சை மரங்களே நாட்டினது சுவாசம்

pushpa_christy@yahoo.com
pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி