இரண்டு கவிதைகள்

This entry is part of 45 in the series 20030703_Issue

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.


கிராமத்து காதல்…

களத்து மேட்டினிலே
கயசைத்து போனவளே…
குறுக்கு சிரித்தவளே
கொஞ்ச நேரம் பாரடியோ…

அரைத்து வச்ச மஞ்ச பூசி
அய்த்தனையும் சேத்து பூசி
அரைநொடி நீ ஊறுப்புள்ள
அப்புறமா பாருபுள்ள…

தெக்கே காத்தடிக்கும்
தெருவெல்லாம் ஊத்தடிக்கும்
நிக்காம ஓடி வாடி…
புடிக்கிறேன் உடும்பு புடி…

பாத்துபுட்டேன் மேடுபள்ளம்
தாவட்டுமா லாவகமா…
மாட்டிகிடேன் நான் வசமா
மச்சான விட்டுடுமா…

ஆச வச்சன் உன் மேலே
பூச எப்போ வச்சுக்கலாம்…
தேதி பாத்து நீ சொன்ன
மீதி கூத்த கத்துக்கலாம்…

அட..போ மச்சானே
ஆகட்டும் பாத்துகலாம்
அரைச்சு விட்ட மீன் கொழம்பு
அள்ளி அள்ளி திண்ணுக்கலாம்…


நீயே கதியனக்கு…

என்
இதயத்தில் பூகம்பம்
எதனால் பெண்ணே ?
இடிந்தது உள்ளம்
உன்னால் தானே!

ஏக்கம் நிறைந்த கண்ணில்
தூக்கம் பறித்தவள் நீ…
சோகம் வளர்ந்தது என்னில்
சுகமாய் ரசித்தவள் நீ…

ஏனடி என்னை பார்த்தாய்
எதுவுமே பிடிப்படவில்லை…
பாரடி இதயம் இன்று
பாவம் துடிக்கவேயில்லை…

உன்னை நினைக்கும் போது
உலகம் கூட கடுகு…
உள்ளம் கொடுத்த பின்பு
உண்மையாய் என்னுடன் பழகு…

ஆயிரம் முறை நான் அழுதேன்
ஆயினும் உன்னையே தொழுதேன் – உன்
உள்ளத்தை நானே உழுதேன்
காதலை அதனில் விதைத்தேன்.

பா.ஸ்ரீராம்
மயிலாடுதுறை

balageethan@rediffmail.com

Series Navigation