தீத்துளி

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

பவளமணி பிரகாசம்


எரிக்கும் நெருப்புப் பந்திலே
சிதறிய அண்ட வெளியிலே
உருவான ஓரணு உயிரிலே
பெருகிய பல இனத்திலே
உயர்ந்து நிற்பது மனிதனே.
ஆதி நெருப்பு அணையவில்லை,
அக்னிக் குஞ்சாய் கிடக்குது,
கனன்று கனன்று எரியுது,
ஆக்கம் பலவும் புரியுது,
அண்டம் முழுதும் தழுவுது,
தொண்டில் கரைந்து போகுது,
தீமை பொசுங்கி சாகுது,
நேயமான நெருப்பிது,
நெஞ்சோடிருப்பது,
உயிரின் மூலத் துடிப்பது-
அணையாத அந்த தீத்துளி
இருளை விரட்டும் அக ஒளி,
அகலில் அடங்கா சுடரொளி,
உலகை காக்கும் பேரொளி.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்