இரண்டு கவிதைகள்

This entry is part of 34 in the series 20030607_Issue

தமிழ்மணவாளன்


குப்பை

கீழ்வீட்டில் குடியிருந்தவர்கள்

காலி செய்து

வேறு வீடு போகிறார்கள்.

காலையிலிருந்தே சின்ன சின்னப்

பொருட்களாய்

ஆட்டோவில் கொண்டு

போனவர்கள் இப்போது தான் ஒரு

டெம்போவில் ஏற்றுகிறார்கள்

கட்டில் பீரோவை.

வீடு மாற்றுவதொரு

சங்கடமான வேலை தான்.

செருப்பிலிருந்து நகை வரை

ஒன்றுவிடாது கொண்டு சேர்க்க

வேண்டும்

புது இடத்துக்கு.

பழகியவரை விட்டுப்

பிரிய வேண்டும்.

சில வேளைகளில்

மாறுதல் நன்மைகளைச்

செய்யக்கூடும்.

உறவுக்காரர்களெல்லாம்

வந்திருக்கிறார்கள்

உதவிக்கு, பரவாயில்லை.

காலி செய்பவர்கள்

எதை எடுத்துக்கொண்டு

போனாலும்

குப்பையை மட்டும் அப்படியே

போட்டுப் போக

வேண்டுமாம்.

அப்படி ஒரு ஐதீகம்.

எப்படியோ,

குப்பைக்கும் ஒரு கெளரவம்

நல்குமிந்த நம்பிக்கை

நன்றாகவே இருக்கிறது.

கணம்

தேவையின் உக்கிரம் மிகுந்த அழுத்தத்தை

உள்ளிருந்து உருவாக்க

வெளிச்சமாய் பிரவகித்த பெருநம்பிக்கை

கணப்பொழுதில் காணாமற்

இருட்டுப் போர்வையாய்

எங்குகிட்டுமினி வாய்த்திருந்தது

உதிரும் அலைந்தோய்ந்த

மனத்தின் விரிசல்கள் வழியே.

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation