கவிதைகள் இரண்டு

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

வேதா


தமிழே நீயா ?

அந்திவானத்து
சுடரென ஒளுர்ப்பு!
அழகான மழலை
மொழியென உயிர்ப்பு!

இயல்பாய் இசையாய்
இளமையின் துடிப்பு!
இறப்பு-பிறப்பு
இணைக்கும் விழி எழுத்து!

உண்மை உணர்த்தும்
உன்னத சிரிப்பு!
உறங்கும் புரட்சியின்
புதுமையின் படைப்பு!

எனக்குள் உருவான
எழுத்துலகத் தொகுப்பு!
என்னையே கைதுசெய்து
ஏங்கவைத்த பொறுப்பு!

ஐந்தாம் வேதமாய்
ஆகிநின்ற கருத்து!
ஒப்பிலா பரம்பொருளாய்,
பிறக்க வைத்த பிறப்பு!

எல்லாமாகி நின்று
உயிர்கொடுத்த கண்மணியே,
நீயே தமிழா ?
தமிழே நீயா ?


முதல் ஸ்பரிசம்

உள்ளத்தின் மென்மையான உணர்வுகளை உள்வாங்கி ,
நரம்பு முடிச்சில் நாணேற்றி,
மூளையின் ஏவல் தாண்டி,
வெளுயேறத் துடிதுடித்து,
வசமான வாசல் தேடி,
ஒருவாசல் ‘வாய் ‘ போக,
ஒன்பது வகையாய் வெளுயேற்ற,
இருகை விரல்கள் இருபது கோடியாய்
நடனம் அரங்கேறும் நாட்டிய நாடகம்…
அன்பே,
உன் முதல் ஸ்பரிசம்!!

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா