அன்னை

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

வை.ஈ.மணி


அதிகாலை துயிலெழுந்து தவனை உசுப்பிவிட்டு
இதமான கதிரவனின் கிரணங்களில் முழுகாடி
சூரியனின் வருகைகண்டு சிறகடிக்கும் பறவைகளைச்
சீருடனே இசைபாடச் சொல்லிடுவாள் அனுதினமும்
பனித்துளிகள் ரகசியமாய்ப் பொழிந்திடுவாள் இரவினிலே
அனைத்துரக விதைகளையும் தழைத்துயரச் செய்திடுவாள்
மறப்பதில்லை கடமைகள் முறையிடுதல் அவளறியாள்
பருவமழை பொழிந்துலகில் பசிபிணிகள் அகற்றிடுவாள்
பொழுதுசாயும் தருணமதில் பனிக்கதிரை உணர்த்திடுவாள்
அழகுசிந்தும் பகலவனை உறங்கவைத்தே.
—-
ntcmama@pathcom.com

Series Navigation

வை ஈ மணி

வை ஈ மணி

அன்னை

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

பவளமணி பிரகாசம்


அவள் கோபப் படவே மாட்டாள்,
வயிற்றுள் உதைத்த குழந்தைகள்,
பல் முளைக்கையில் கடித்த பிள்ளைகள்,
வெடுக்கென பேசும் வாலிப வாரிசுகள்,
தாரத்தை தாங்கி ஒதுங்கும் மகன்கள்,
செம்மண்ணில் விழுந்த மழை நீராய்
பிறந்த வீட்டை திரும்பிப் பாராத மகள்கள்-
இதுதான் நியதி, இதுவே இயல்பு,
என்றே இனிதாய் ஏற்றிடுவாள்-
அன்னை என்பது அவள் பெயர்.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

அன்னை

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

ஸ்ரீராம்…


அண்ட சராசரங்களில் நம்மை சங்கமிக்க வைத்த தெய்வம்….
கருவரையில் இருந்தே அன்பு காட்டிய நல்ல நண்பி…..
பாசம் மீது எப்படி பாசம் வைப்பது என எடுத்துக்காட்டான ஒரு சொந்தம்…..
நல் எது தீது எது என எடுத்துச்சொன்ன நல் ஆசிரியை…..

நம் வாழ்வை வகையாய் வழிப்படுத்தி கொடுக்கும் வழிக்காட்டி…..
சோர்ந்து போகும் காலங்களில் தட்டிக்கொடுக்கும் ஒரு துணை(அல்ல ஒர் தூண்)
நோய்வாய்படும் போது நம்மை கவனிக்கும் நேர்த்தியான மருத்துவச்சி…..
நம் முன்னேற்றத்தை தன் கண் குளிரப் பார்க்கும் அழகான நேசம்…..

நம் இன்னல்களை சுகமான சுமையாய் தாங்கும் சுமைதாங்கி….
அன்னம் எனும் உண்மையை படைக்கும் அன்னை…..
ஒரு வகையில் அதன் பெயர் காரணம் அன்னையால் தானோ ? ? ?
குடும்பம் எனும் மரத்தை தாங்கும் ஆனி வேர்…….

இப்படி பல்வேறு வடிவங்களில் நம்மை பெற்று வளர்க்கும் அன்னையை நாம் என்றும் அன்போடு பேணிக் காப்போம்…..
அன்னையருக்கு உரித்தான அன்னையர் தினத்தை கொண்டாடுவோம்…….

அன்புடன், ஸ்ரீராம்…
slib@rediffmail.com

Series Navigation

ஸ்ரீராம்

ஸ்ரீராம்