நானும்…. நீயும்

This entry is part of 28 in the series 20030504_Issue

மீ.வசந்தகுமார்,சாத்தூர்


உன்னை விசாரிக்கும்
முகவரி தொலைத்தும்
முகம் மறக்காத…..
என் மூளையின்
மூலையோர நியூரான்கள்.

எனக்கும் தெரியும்
என்னை நினைக்கும்
உன் உணர்வுகளை.
எனக்குள்ள வலி
உனக்கும் இருக்கலாம்
புரிதல் கடினம்.

இது ஈர்ப்பா!! ?
இல்லை நட்பா!! ?
இரண்டுக்கும் பிறந்த காதலா ?
பெயர் தெரியா உறவா ?
………………
எதுவாய் இருந்தாலும்
சொல்ல முடிவது…
உன்னை பிடிக்கும்,
அவ்வளவு தான்.

எத்தனையோ விசயங்கள்
அழுத்தமாய் மனதுக்குள்.
வெடிக்காமல் இருத்தல் நலம்,
அகம் மறைக்கும்
என் முகத்துக்கும்..,
சுகம் விசாரிக்கும்
உன் தொடர்புக்கும்.

எனக்கு மட்டுமே தெரியும்
இந்த நீ ? ? ?
நீதானென்பது…
உனக்கும் தெரியலாம்! ?
பின்னொரு நாள்
என் பேத்திக்கு
பெயரிடும் பொழுது.

meenatchivasanth@rediffmail.com

Series Navigation