நீயுமா ?

This entry is part of 27 in the series 20030413_Issue

புஷ்பா கிறிஸ்ரி


விட்டில் பூச்சிதான்

விளக்கைக் கண்டு பறக்கும்

விழுந்து செத்து மடியும்.

மனிதனே நீயுமா ?

பதவியைக் தேடி….

பதவிக்காகப் பதறியடித்து..

வெற்றி நிச்சயமில்லை.

தோல்வியும் நிலையில்லை..

சிந்திக்கத் தானே

சம்பளம் தருகின்றனர்

சொந்தப் பிரச்சனைக்கு

அங்கிடமில்லையே

எத்தனை நேரம்

உழைத்தாய் என்பதே

உன் கேள்வி.

என்ன பலன் தந்தாய்

என்பதே அதிகாரியின் கேள்வி

நாளின் எப்பகுதி உனக்கு

உன் கடமையைச்

சிறப்பாகச் செவ்வனே

செய்ய உகந்தது ?

காலையா ? மாலையா ? இரவா ?

கணக்கிட்டுப் பார்

உலகம் உனக்கு முன்…

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation