நினைவுகள்

This entry is part of 31 in the series 20030406_Issue

மலர்வனம்


சிறு சிறு துளிகளாய்
சிதறிய நினைவுகளை
சேர்த்து வைத்தாற் போல்
அங்காங்கே மின்னல் போல்
தோன்றும் – காட்சிகளும்….
தொடரும் நினைவுகளும்….!

சின்னஞ் சிறு வயதில்
என்னுள் பின்னி பிணைந்த உறவுகள்
கண்ணை மூடும் வேளையிலும் – என்
கனவில் வரும் உருவங்களும்…..!

பள்ளி செல்லும் வேளை வர
காரணமின்றி கால் வலிக்கும்!
போலியாய் கண்கலங்கி
போகமல் விட்ட நாட்களும்…

பருவம் உருகொள்ள,
‘பார்த்து இரு!
காத்துகருப்பு உலாவுது ‘ – பாட்டி சொல்ல,
வேண்டா வேறுப்பாய்
வீட்டில் கிடந்த நாட்களும்…

பெண்ிகளும் படிக்க வேணுமா ?
அப்பா அதட்டியும், அடம்பிடித்து
கையில் வாங்கிய
கல்லூரி பட்டங்களும்……..

திருமண வயதை எட்டியுடன்
எவர் மணமுடிப்பாரோ!
ஏக்கமாய் எண்ணிய நாட்களும்……..

இன்னும் மலரும் நினைவுகளாய்……….
நெஞ்சில் இனிக்கும் ராகங்களாய்…
ரசிக்க வைக்கும் காட்சிகளாய்…
மறுஜென்மத்திலும் நான் நானாய்
பிறக்க வேண்டுமென்று…..

********
malar_vanam@sify.com

Series Navigation