மீண்டும் பசுமை..

This entry is part of 28 in the series 20030323_Issue

புஷ்பா கிறிஸ்ரி


இறந்து போன இலைகள்

பழுத்து, கறுத்து

மரத்தை விட்டு பிரிந்து

மடிந்து

நிலத்தில் வீழ்ந்து

மண்ணோடு மண்ணாகி

தொலைந்து போயின

பனிக்குவியலில்…

மீண்டும் தெரிய போகும்

பசுமைத் தன்மை..

மரணித்துப் போன

இலைகளற்ற மரங்களில்

புதிய துளிர்கள் துளிர்க்க

வாழ்வின் மறுமலர்வு போல்..

மீண்டும் ஒரு புதிய பிறப்பு..

மரங்களில் வசந்தங்கள்

சிரிக்கத் தொடங்கட்டும்..

மனிதங்களிலும் தொடரட்டும்..

pushpa_christy@yahoo.com

Series Navigation