என் பிரியமானவளே !

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

தா.பாலகணேசன்


என் பிரியமானவளே
கொழுந்துகள் அடங்கிய
துயர் நெருப்பின் பின்னணியோடு
ஊதா நிற வயல்களில் இருந்து
என்னிடத்தில்
கோடையின் வாசனையைக் காவி வருகின்றாய் !

அந்தி சாய்ந்த பொழுதின்
வர்ணக் குழைவிலிருந்து
நீயோ எனக்கு
அழியாக் காதலின் ஓவியத்தை
வரைந்து அனுப்புகின்றாய் கிளியே !

மலைச் சாரல்களில் வழியும்
நீலப் பேராற்றலின்
கண்ணுக்குத் தெரியாத
வலிய நரம்புகளை
உன் விரல் கொண்டு மீட்டுகின்றாய் !
காதல்
வாழ்வின் சுருதி கிளர்ந்தெழ

காதல் புரிந்த அற்புதமான
தாய் நிலத்தின்
கோடையைக் கொழுத்திய
தகிப்பின் இசை மேவும்
பாடலை எங்கிருந்து பாடுகின்றாய்.

தா.பாலகணேசன்
25.07.2002
கோடைகாலமாலை

***

பிரிவு
தா.பாலகணேசன்

அப்பா
அம்மா அணைத்து
முத்தம் பொழிந்த காட்சிகளின்
தொகுப்பாக குழந்தைமனது

எல்லா
நிறங்களும் கரைந்து போகிற
பனிக்கால இரவு
அச்ச மூட்டுகிறது.

அப்பா சொன்ன கதைகள்
அவிழ்கின்ற குழந்தை மனதுக்குள்
பனிக் காட்டு நரி ஊளையிடுகிறது;
அதனால்
வஞ்சிக் கப்பட்ட ஓநாய்
பசியோடு அலைந்து திரிகிறது.

குழந்தையின் முகத்தில்
பிரிவின் ஆறாவலியோவியன்
துயர் வீச்சக் கோடுகளால் கீறினன.;
தா.பாலகணேசன்
கோடை காலமாலை
19.ஆடி.200

tharsanbalaganesan246@hotmail.com

Series Navigation

தா.பாலகணேசன்

தா.பாலகணேசன்