காத்திருப்பாயா…

This entry is part of 37 in the series 20030202_Issue

மலர்வனம்


அன்னையின் அரவணைப்பாய்..
ஆற்றின் ஓடையாய்
இலையின்நிறமாய்
ஈக்களின் கூட்டமாய்
உள்ளத்தின் துடிப்பாய்
உதட்டின் மச்சமாய்
உயிரின் உறவாய்
ஊஞ்சலின் ஆடலாய்
ஒழுங்கின் வடிவாய்
ஓவியனின் ஓவமாய்

கடலின் அலையாய்
கவிஞனின் கவிதையாய்
குழந்தையின் மழலை பேச்சாய்
சந்தோஷத்தின் சிரிப்பாய்
ஞானத்தின்ஒளுயாய்
டயானவின் அழகாய்
தமிழின் இனிமையாய்
தாயின் தாலாட்டாய்
நன்றியில் நாயாய்
நிலவின் நிறமாய்
பஞ்சத்தில் உணவாய்
மறைந்த மச்சமாய்
யாழின் இசையாய்
ராஜ்யத்தில் அரசனாய்
லட்சியவாதியாய்
விடிவெளிளியாய்

இன்னுமொரு சந்தர்ப்பம்
இயற்கை எனக்களித்தால்,
எந்த உருவிலும், எந்த உயிரிலும்
மறைந்து நான் வந்தால்..
மறு ஜென்மத்திலும்..
எனக்காக காத்திருப்பாயா……..

malar_vanam@sify.com

Series Navigation