அமைதி

This entry is part of 37 in the series 20030202_Issue

மொழியாக்கம் : ஜடாயு ( மூலம் : சுவாமி விவேகானந்தரின் Peace என்ற கவிதை)


அறிந்து கொள் நண்பா
ஆற்றலிடம் மட்டுமே வரும்
அமைதி

சக்தியாய்த் தோன்றாத சக்தி
இருளில் இருக்கும் ஒளி
ஒளிப்பிழம்பின் நிழல்
அமைதி

பேசாத பேருவகை
சோகப் படாத பெரும் துக்கம்
வாழாத அமர வாழ்வு
அஞ்சலி பெறாத முடிவில்லா மரணம்
அமைதி

இன்பமும் அல்ல துன்பமும் அல்ல
இடைப்பட்டது அமைதி
இரவும் அல்ல பகலும் அல்ல
இவற்றை இணைப்பது அமைதி .
(c) ஜடாயு (jataayu@hotmail.com)
** மூலக் கவிதை : The Complete Works of Swami Vivekananda, Published by Advaita Ashrama, Calcutta, INDIA .

Series Navigation