பூவின் முகவரி

This entry is part of 29 in the series 20030119_Issue

மு.சேவகன்


(அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் குழந்தையை அனாதையாகப் போட்டுச் சென்ற அன்னையைப் பார்த்து குழந்தை பேசுவதாக எழுதிய கவிதை)

நான் ஆகாயம் ஏற்காத விண்மின்
இஇரு மேகங்கள் மோதிக்கொண்டதில்
… பூமிக்கு வந்த வானம்
மானுடப் பரிணாம வளர்ச்சியின்
… அவமானச் சின்னம்

அன்னையே…
கார் மேகத்தை கண்டு
வசந்தமென நீ ஏமாந்தது
என் குற்றமல்லவே… ?
அறிவு அடைபட்ட விளையாட்டிற்கு
நான் கேள்விக்குறியா… ?
தொலைந்து போன பிள்ளையை
பெற்றோர் தேடுவர்
‘தொலைந்து போ ‘ என்று கிடத்திய
உன்னை நான் தேடமாட்டேன்

அன்னையே…
பத்து மாதந்தான் சிறை என்றிருந்தேன்
அனாதை முத்திரை குத்தி -என்னை
ஆயுள் கைதியாக்கி விட்டாயே!
உன் வசந்தத்திற்காக
நான் பாலை வனத்திலா… ?
குயிலின் இரக்கம் கூட
உன்னிடம் இஇல்லையே ?
தளிராகிய நான் சாபமிடுகிறேன்
தாய் மரமே நீ மலட்டுமரமாக…!
இஇன்னொரு முகவரி இஇல்லாப் பூ
பூக்காதிருக்க…

***
s_appukutty2002@yahoo.com.sg

Series Navigation