ஸ்ரீஆஞ்சனேயன்..

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

கவியோகி வேதம்


வாலிலும் எமன்கொண்ட
.மறவன்-சொல்லின்
.. சூலிலும் நயம்கண்ட
..துறைவன்!
காற்றையும் படகாக்கும்
.கலைஞன்;-கூற்றின்
.ஆற்றலைப் பொடியாக்கும்
அறிஞன்!
இராமன்தன் துணைபிரிந்த போது,-அடையும்
.இஇலக்கின்நல் வழிசொன்ன சாது!
வராமல்சுக் ரிவனிருந்த நேரம்-இஇலக்குவன்
..மனக்கோபம் தணித்தசொல் சாரம்!
கடலையா தாண்டினான் அனுமான் ?-நம்-பவக்
..கடலையன்றோ மாற்றினான் பெம்மான்!
வடமாலை(வடசரம்) சீதைகையால் அணிந்தான்!-இஇன்றோ
..வடைமாலை சரம்சரமாய்ப் புனைந்தான்!
சீதைக்கே, ஆறுதலாய்க் கணையாழி!-தந்தவன்
..திவ்யநாமம் சொல்லப்-போம் வினைஆழி!
காதையிலே ‘ராமநாமம் ‘ சொல்விருந்து!-அங்கிவனைக்
..கண்டுகொண்டு வரம்பெறுவோம் இஇங்கிருந்து!

***(கவியோகி வேதம்)
sakthஇa@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்