விடியலை நோக்கி

This entry is part of 30 in the series 20021230_Issue

பிரியா ஆர்.சி.


புலரும் புத்தாண்டில்

புதுமைகள் பலசெய்து
புன்னகை நிதம் தவழ
புகழ் மாலை தேடிவர

உதவும் வழக்கம் உடைபோல்
உதிக்கும் எண்ணம் மலைபோல்
உறவினர் உடனிருந்து உற்சாகம் ஊற்றெடுக்க

பகை எல்லாம் பனியாய் மறைந்து
பசுமை நினைவுகள் பலசுமந்து
பளிங்கு போல் பிரகாசிக்க

உலகெல்லாம் உறவாய்
உள்ளமெல்லாம் உவகையாய்
உழைப்பே உரமாய் அமைய

மனித நேயம் மலர்ந்து
மன(த)ங்கள் எல்லாம் இனைந்து
பூமி சொர்கத்திற்கு முகவரியாக

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பிரியா ஆர். சி.

rcpriya@yahoo.com

Series Navigation