புத்தம் புது வருடம்..

This entry is part of 30 in the series 20021230_Issue

புஷ்பா கிறிஸ்ரி


ஒரு நிமிடத்து நகர்வில்

ஒரு புதிய வருடத்தின்

உயிர் பிறப்பு..

வாழ்க்கைக் கனவுகளின்

எண்ணங்கட்கு

நிறங்கள் தந்திடத்

துடிக்கும் கலண்டரின்

பரிணாம வளர்ச்சி

நாளாய், பொழுதாய்

விடிந்திடும் நிலையை

மண்ணிற்குத் தந்திட்ட

மாதத்தின் புதுப்பிறப்பு..

காலத்தின் கணக்குத்

தவறாமல், பிசகாமல்

நடக்க உதவிடும்

கடிகார முட்களின்

புதிய நர்த்தனம்

பிறக்கும் புத்தாண்டில்

உள்ளங்கள் மகிழ்ந்து

கொண்டாடி மகிழ்ந்திட

வாழ்த்துக் கூறிடும்

நல்ல நட்புக்களின்

புதிய சங்கமத்தில்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

மலரட்டும் மேன்மை

மிளிரட்டும் ஆன்ம,

உடல் நலன்கள்

உதிக்கட்டும் புதுமைச்

சூரியக் கதிர்களில்

நல்ல நாள், முழுமையுடன்

வருடத்தின் முதல் நாள்

வாழ்த்துவோம்..

வாழ்வோம்..

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation