நீங்கள் இன்று…

This entry is part of 24 in the series 20021118_Issue

புஷ்பா கிறிஸ்ரி


அன்று நீங்கள்

அழகாக உழைத்தீர்கள்.

ஆடம்பரமாக நடந்தீர்கள்.

ஏழைகளாய் நாங்கள்

உங்கள் அழகைப் பார்த்து

ஏக்கத்துடன் பெருமூச்சு

விட்டுக் காத்திருந்தோம்

எமக்கும் ஒரு காலம்

வரும் என்று

இன்று எமக்கும் ஒரு காலம்

இதமாய் வந்தது

நாங்களும் உம் போல்

நலமாய் உழைக்கின்றோம்

உழைத்து உழைத்து

உயர்ந்து வருகின்றோம்

நீங்கள் உங்கள்

உழைப்பை மறந்து

உயர்வை மறந்து

ஓய்யார வாழ்வில்

உம்மை மறந்தீர்கள்.

இன்று நீங்கள்

மீண்டும்

அன்றைய எம்போல்

உழைப்பின்றி,

உயர்வின்றி

உரு மாறி ஏழைகளாய்…

நாங்கள் உம் இடத்தில்..

பணக்காரார்களாய்…

பண்பாளர்களாய்..

இது வாழ்க்கை

எமக்குக் கற்றுத் தந்த பாடம்.

நீங்கள் வாழக்கையிடம்

கற்க மறந்த பாடம்

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation