நலமுள்ள நட்பு

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

ராஜி


கோபம் மறைந்தால் கண்கள் சிறுக்கும்,

சோகம் அடக்கினால் சஞ்சலமாக இiருக்கும்,

வெகுளியாகப் பேசினால், வம்பளந்ததாகத் தோன்றும்,

இiகுளையாக iருந்தால், அபூர்வமாக தெரியும்,

உன்னுடன் பழகும்முறை எனக்குச் சொல்லுவையோ ?

என்னுடைய எண்ணம் உண்மையாகத் தெரியலையோ ?

தோழமை நேர்மையாக, தயங்காமல் வாழவேண்டும்,

பொழுதெல்லாம் பயமில்லாமல், மலரவேண்டும்,

மனிதருடைய கருத்து மரியாதையாய் சொல்லவேண்டும்,

சிநேகிதருடைய அபிப்பிராயம் கேட்க வேண்டும்,

பலமுள்ள வாழ்வு பரிசாக வருமோ ?

நலமுள்ள நட்பு நமக்குத் தருமோ ?
***
r2iyer@acs.ryerson.ca

Series Navigation

ராஜி

ராஜி