கடற்கரை வாக்கிங்

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

கவியோகி வேதம்


யின்னும் என்ன தூக்கம் என்றே ?- ‘டாமி ‘

…என்னைத் தட்டி எழுப்புது;-வெளியே

நின்று குரைத்த களைப்பு போக்க-அது

….நீள ‘வாக்கிங் ‘கிற் கழைக்குது!

‘காலை நடந்தால் உடம்புக்கு நல்லது ‘-அதி

…காலைச் சூரியன் சொல்லுது!

நீல வானம் சிவப்பாய் மாறும்-வித்தை

…நித்தம் எனக்குப் பிடிக்குது!

கடலின் கரையில் டாமி ஓட-என்

…கால்கள் நனைந்து சிலிர்க்குது!

கடலையைப் போல ‘நண்டுகள் ‘ உருண்டு-என்

….கவிதை- மனசைத் திறக்குது!

யிலையில் தூங்கும் பனியை விரட்டி-கதிர்

…எல்லாச் செடியையும் எழுப்புது!

வலையில் மாட்டும் மீன்கள் மட்டும் ?-அய்யோ

…மனசை ரொம்ப வாட்டுது!

(யோகியார்)
sakthia@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்