தீவுகள்

This entry is part of 29 in the series 20021110_Issue

பொன் முத்துக்குமார்


முகமன் சொல்லியிருக்கலாம் ;
நலம் விசாரித்திருக்கலாம் ;
நல்ல நாளுக்காய் வாழ்த்தியிருக்கலாம் ;
குறைந்தபட்சம்
ஸ்நேகபாவத்துடன்
புன்னகைத்திருக்கலாம்.
குனிந்தபடி –
நேர்பார்வை பார்த்தபடி –
கால்சட்டைப்பைகளில்
கைகள் நுழைத்தபடி –
மார்புக்குக் குறுக்கே
கைகள் கோர்த்தபடி –
கடக்கும் மாடியெண்களை
அண்ணாந்து பார்த்தபடியென
நுழைந்தும் வெளியேறியுமே இருக்கிறோம்
ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் லிஃப்டில்
சலனமற்று

pmkr@hotmail.com

Series Navigation