தண்டனை

This entry is part of 27 in the series 20021027_Issue

அனந்த்


இளமையின் ஊஞ்சல் முதுமையின் நோஞ்சலிலும்
பருவத்தின் பாய்ச்சல் உருவத்தின் தேய்தலிலும்

அழகின் பெருமிதம் கிழத்தின் சுருக்கத்திலும்
வளமையின் பெருமை வறுமையின் பொருமலிலும்

மருதத்தின் மாலை மணற்பாலை வெய்யிலிலும்
வசந்தத்தின் தென்றல் வெண்பனியின் வாடையிலும்

மலர்செறிந்த பூங்கா முள்நிறைந்த பெருங்கானிலும்
பலரோடு கண்ட இனிமை பலமற்ற தனிமையிலும்

ஏன் முடியவேண்டும் ?
காலம் கடந்தும் எம்மோடு தொடர்ந்துவரும்
கணக்கிலா நினைவுகள் கடவுள்தரும் தண்டனையோ ?

ananth@mcmaster.ca

Series Navigation