மனம்

This entry is part of 27 in the series 20021027_Issue

புஷ்பா கிறிஸ்ரி


யாருடையது ?

அது உன்னுடையது தான்

அதை நீதான் கவனிக்க வேண்டும்

யார் வருகிறார்கள் என்று கவனித்துக் கொள்

கண்டவரும் வரலாம்

அதோ அந்தப் பாறை

தனியாகத் தானே கிடக்கிறது

அது யார்,, ? வேறு யாருமல்ல

நீயே தான்.

இதோ உன் கால் வழியே

கடந்து செல்லும் இந்த நதி யார் ?

அதுவும் தனியாகத் தான் ஓடுகிறது

அது யார் ?

நீயே தான்

அந்த மலை தனியாகத்தான் நிற்கிறது

அது யார் ?

நீயே தான்.

எல்லாமே பிரமையாய்த் தெரிகிறதா ?

அது தான் உன் மனம்

மனதைத் தூய்மைப் படுத்திக் கொள்.

அங்கே நீ தெரிவாய்

உலகம் தெரியும்

மனிதம் தெரியும்

மாயை விலகும்

அன்பே விளையும்

இன்பம் மலியும்

எல்லாம் உன் கையில்

நீயே இந்த உலகம்

எண்ணிப் பார் மனமே!

pushpa_christy@yahoo.com

Series Navigation