இயலை விஞ்சி விட்ட செயல்

This entry is part of 35 in the series 20021022_Issue

– ஜடாயு


சிறுமணல் துகளினும் நுண்ணிய
சிலிக்கன் சில்லுகளில்
சிந்தனைகள்.
கணினிகள் சமைக்கும் அனுபவங்கள்.
கண்காணா மின்காந்தக்
கதிர்கள் கொண்டு செல்லும்
காட்சிகள் கானங்கள் கதைப்புக்கள் கனவுகள்.
உள்ளங்கையில் உலகம்.
வசப்பட்டு விட்ட வானம்.
சோதனைச் சாலையில் உயிர் விளைவிக்கும்
பிரம்மவித்தை.
செயற்கைக் கைகள் கால்கள்
இதயங்கள் மனங்கள் மூளைகள்.

இருபதாம் நூற்றாண்டில்
இப்புவியின்
இயலை விஞ்சி விட்ட மானுடச் செயல்.

jataayu@hotmail.com

Series Navigation