பெண்களின் காலங்கள்.

This entry is part of 30 in the series 20020917_Issue

எஸ். வைதேஹி.


முந்தைய காலத்தின்
நிலவின் சரிவில்
சினத்தின் சாயல்
நிறம் பூத்தது.

வெட்டுப்பட்ட
வெற்றுச்சிறகுடன்
நந்தவனம்
கடந்த
நிகழ்காலம்
வெயில் பரவி
அனல் குளிரும்
அர்த்தமற்ற பொழுதுகளாய்.

பிந்தைய காலத்தில்
விடைபெற்ற வாசனை
துக்கப் பிண்ணனியில்
குழம்பிக்கிடக்கிறது
தலைக்குள்
ஞாபகமற்ற
வார்த்தைகள்.

***
svaidehi@hotmail.com

Series Navigation