ஒன்பதில் குரு

This entry is part of 30 in the series 20020917_Issue

நம்பிராஜன்


திண்டிவனம் பக்கம்
திருவக்கரை
வக்கரை போனால்
அக்கரை போகலாம்
கல்மரங்கள் முளைத்த
காடு அங்கேதான்
மும்முகம் கொண்ட
மூலஸ்தான லிங்கம்
வக்ர தாண்டவத்தில்
நடராஜர்
விரும்பியது கைகூடும்
வக்ரகாளியிடம் வேண்டிக்கொண்டால்

ஒரு ஒளவை
ஒரு ஆண்டாள்
ஒரு காரைக்காலம்மையார்
யார் படிக்கிறார்கள்
இப்பொழுதெல்லாம்
ஒக்கூர் மாசாத்தியார்
காக்கைப் பாடினியார்
படித்திருப்பார்களா
இந்தத் தலைமுறையினர்

ஒன்பதில்
குரு.
***

Series Navigation