எனக்கு வேண்டியது…

This entry is part of 25 in the series 20020902_Issue

ஆனந்தன்


பகடை உருட்டி
நாட்டைப் பற்றும்
பக்குவம் வேண்டாம்…

வாயைத் திறந்து
உலகைக் காட்டும்
வல்லமை வேண்டாம்…

வில்லை உடைத்து
சீதை மணக்கும்
வலிமை வேண்டாம்…

சூது பேசி
கர்ணனின் உயிரை
சூறையாட வேண்டாம்…

சஞ்சீவி மலையை
அடியோடு தூக்கி
சாதிக்க வேண்டாம்…

நான் கேட்பதெல்லாம்,

கண்மணி என்னவளுக்காக
கவிதை எழுத
கற்பனை வேண்டும்!

ஆனந்தன்
k_anandan@yahoo.com

Series Navigation