கழுதை ஞானம்

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

மு.புகழேந்தி


மனையால் விரும்பிய
மஞ்சள் வண்ணத்தில்
மல்லிகை பூ போட்ட
புடவையின் மதிப்பை பார்த்து
மனமறிந்து சொன்னேன்
வண்ணச் சேர்க்கை
எண்ணியபடி இல்லை

மரக்குதிரை வாங்க
மன்றாடிய குழந்தையிடம்
விலையேற்றம் பார்த்து
விளையாட்டுக்கு
உகந்ததில்லை என்றேன்

மிதியடி கடையில்
மிஞ்சிய விலைபார்த்து
மலிவு விலையில்
ஒரு சோடி வாங்கினேன்

பலசரக்கு கடையில்
பலதரம் பார்த்து
பணம் குறைந்த தரத்தில்
உடல் நலம் குறைத்து
உயிர் வாழ
உகந்ததை வாங்கினேன்

இனிய இசையை, மதியை
இன்பொருள் இளமையை
இல்பொருள் இன்பத்தை
பொன்பொருள் சேர்க்க
மங்கிய(மந்தி ) மதியுடன்
மாற்றானின் செயல் நடந்தேன்

எண்ணம் போல் சேர்த்த
பணத்தை எண்ணிபார்த்து
கட்டிய மூட்டையை
கதவு இடுக்கில் வைத்து
சிறுவேலை நிமித்தம்
உள்ளே சென்றேன்

வீதியில் திரிந்த
சிறுகழுதை ஒன்று
பழக்கத்தின் செயலில்
மூட்டையை உதைத்து
உதிர்ந்த குப்பையை
சலனமின்றி உண்டது

கழுதைக்கு உதித்ிதது
என் மதிக்கு உறைக்கவில்லை
அதுவும்
வண்ணக்காகிதமென்று!

***
pugazhendi@hotmail.com

Series Navigation

மு.புகழேந்தி

மு.புகழேந்தி