சின்னச் சின்னதாய்…

This entry is part of 29 in the series 20020722_Issue

ஆ. மணவழகன்


ஆம்!
நீயேதான்,
காட்டிக்கொடுத்தது
உன் கொலுசு!

*

விடியலே ..
சற்றே பொறு,
கனவில் என்னவள்!

*

தினமும் நீ தொட்டதால்
சிவந்து போனது,
குளியல் அறையில்
ஒற்றை மஞ்சள்!

*

கொஞ்சம் ஈரம்,
கொஞ்சம் காதல்,
உன் ஓரப்பார்வை;

கொஞ்சம் தென்றல்,
கொஞ்சம் புயல்,
என் சிறு இதயம்;

*

தென்றலே மெல்ல ! மெல்ல!
என்னவள் கூந்தலில்
ஒற்றை ரோஜா

*

ஒதுங்கிப் போனாய் நீ
உள்ளே வந்து போனது
உன் நிழல்!

*

a_manavazhahan@hotmail.com

Series Navigation