அமானுஷ்யக் கனவு

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

அலர்மேல் மங்கை


கையில் ஒரு குழந்தை
பட்டுச் சட்டையுடனும், துறு துறு பார்வையுடனும்
என்னுடையது அல்ல
யாருடையதோ ?

ரோஜாத் தொட்டிக்கு மேலிருக்கும்
சுவற்று மூலையை வெறிக்கிறது குழந்தை..
என்ன என்று தொியவில்லை
என்னவோ அமானுஷ்யம் அங்கே

வீட்டுக்குள் பறக்கிறேன்
நான் பறவையும் அல்ல
சுவற்று மூலையில் ஏதோ அமானுஷ்யம்
பரபரக்கிறேன் தந்தையிடம்

இதென்ன பேய்ச் சிாிப்பு…அப்பாவிடம் ?
குழந்தை மறைந்தது…
அமானுஷ்யம் மறைந்தது..
அப்பாவும் மறைந்தார்..

ஆயிரம் விளக்கங்கள் தந்தான் தம்பி
‘மனிதனுக்குப் பறக்கும் வேட்கை என்றுமே உண்டு,
அப்பாவின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கனவில் உயர்த்திய போர்க் கொடி,
ஆழ்மன எழுச்சியின் உருவமே குழந்தை… ‘

ப்ராய்டை ரெம்பப் படித்து விட்டான் அவன்.

***
alamu_perumal@yahoo.com

Series Navigation

அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கை