காலத்தின் கணக்கு

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

புஷ்பா கிறிஸ்ரி


காலம்
இடத்தை, பொருளை உணர்த்தும்
உலகை வலக்கையால் நகர்த்தும்
மனத்தை நினைவில் நிறுத்தும்
இனத்தை மறந்து நட்க்கும்

காலத்தின் கணக்கு விசித்திரமானது
காலம் இல்லை என்றால்
இந்த ஞாலம் இல்லை

காலக் கணக்கு நிரந்தரமானது
மாறாதது, மாறக்கூடாதாது
மாற்ற முடியாதது

எத்தனை கணக்குகள் ?
எத்தனை பிணக்குகள் ?
எத்தனை இணக்கங்கள் ?
எத்தனை விளக்கங்கள் ?

காலத்தின் கோரப் புயலினுட்
சிக்கிய இந்த ஞாலம்
பயப்பட்டுத்தானே ஆகவேண்டும்

மனிதனும் காலத்தின் பிடியில்…
இவன் மட்டும் என்ன
விதி விலக்கா ?
மனிதனே ஓடிப் பார்
காலத்தோடு நீயும்
விளையாடிப் பார்

புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி