கவிதைகள் மூன்று

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

ரமேஷ்.


இருளடைந்த கிழட்டுத் தெருக்களில்
வெளிறிப் போய் திசை தப்பி திாிந்து கொண்டிருந்தோம்…
ஒரு கேள்வியா-பதிலா
எது நம்மை ஆசுவாசப் படுத்துமென்று தொியாமலே..
வீடுகளுக்குள்ளும் அனாதைகள் புரண்டு கொண்டிருக்க
ஒரு போதும் மெளனத்தை நிரப்ப முடியா
வெற்று வார்த்தைகளில் சிக்கிக் கொண்டு

ஒரு தொடுதல்
ஒரு பார்வை
ஒரு அணைப்பு

வார்த்தைகளின்றி
எவ்வளவோ சொல்லியிருக்க முடியும்
அப்போது

@ @ @

பழக்கப்பட்ட
எது போலவும் இல்லை
இக் கவிதை
ஒரு கவிதையைப் போலவும் கூட!

@ @ @

அழிக்க முடிந்தால்
எழுதி அழித்த தாள்களில்
வாய்க்குமோ
எழுதா தாள்களின் பேரெழில்.

@ @ @

Series Navigation

ரமேஷ்

ரமேஷ்