கடற்கரை

This entry is part of 30 in the series 20020512_Issue

ஆன் ரணசிங்கே


(தமிழில் இரா.மதுவந்தி)

காலையின் அலைகள்
இடிப்பதுவும் சரி
காற்றின் வெளிச்சமான பாடலும் சரி

அவனது குரைத்தல்களை
மூழ்கடிக்க முடியாது
மூன்று சிறுவர்கள், ஒரு நாய்க்குட்டி
கடற்கரையில் சித்திரவதை

அவனது துன்பம்
உன் கண்களில் இருண்ட ஓட்டையை கிழிக்கிறது

கயிறு இறுக்குகிறது
சின்னக்குச்சி வலிமையாக அடிக்கிறது
பிறகு அவர்கள் மணலை வீசுகிறார்கள்
அதைப்பார்த்து
அனாதரவான கோபம்
உன் கைகளை முறுக்குகிறது

மணல் அவன் கண்களை நிரப்புகிறது
மணல் அவன் மூக்குகளை நிரப்புகிறது
மணல் அவன் காதுகளை நிரப்புகிறது

உன் கண்ணீரின் வழியே
உப்பு உன் வாயில் இறங்குகிறது
அந்நியப்பட்ட வருடங்களில்
என் நாக்கு அழுகி
நகர்த்தமுடியாததாகி விட்டது

சூரிய வெளிச்சமடிக்கும் கடலில்
மக்கள் குளிக்கிறார்கள்
அது ஒரு சாதாரண நாள்

அவர்கள் கத்துகிறார்கள் ‘வா விளையாடலாம் ‘
அவனை புதைப்பதைப் பற்றி

பிறகு
அவர்கள் அவனைப்புதைக்கிறார்கள்.

Series Navigation