வேண்டாம் பகை

This entry is part of 23 in the series 20020505_Issue

புஸ்பா கிரிஸ்ரி


விடியல்கள் அமைதியாக
விடிகின்றன

என்றாலும் மனதில் ஏனோ
ஒரு வித பயம்

திகதிகள் மாறும் போது
மனம் கணக்குப் போடும்
இன்றைய நாள் எப்படியோ ?

இன்றைய எதிர்பார்ப்புக்களை விட
நேற்றைய சந்தோசஷங்கள் போதுமே

இன்று எம் வானில் சமாதானப் புறாக்கள்
வல்லூறுகள் மறைந்து சமாதானம்
பேசிடும் புறாக்குஞ்சுக் கூட்டங்கள்

இன்னுமொருமுறை என் தேசம்
அழ வேண்டாம்

போதுமே பகை

போர் வானிலே
பூக்களைக் கண்டுவிட்டோம்

புத்தன் பிறந்த பூமியில்
இரத்தம் கண்ட மக்கள்

மீண்டும் மீண்டும் யாசிக்கும்
இந்த அன்னை பூமியின்
மைந்தர்கள், பிரஜைகள்

வேண்டாம் பகை
விடியல் போதும்
விடுதலை போதும்

Series Navigation