கடிகாரம்..

This entry is part of 31 in the series 20020330_Issue

ஆனந்தன்


கடும் மலையையும்,
பரந்த உலகத்தையும்,
அகன்ற வானத்தையும்,
ஆழ் கடலையும்,
ஆட் கொண்ட விஞ்ஞானமும்,
உன் கட்டுப்பட்டில்!

நான் துங்கும் போது
நூறுக் கால்கள் மூளைக்கும் – உனக்கு
என் காதலிக்காக
காத்திருக்கும் போது மட்டும்
யாருடன் மயங்குகிறாய் ?

என் காதல் கண்டு
பொறாமை உனக்கு,
என் காதலியோடு
இருக்கும் போது மட்டும்
விரைகிறாயே!

என் காதலியை விட
அதிகம் பார்த்திருக்கிறேன்
உன்னை
அவள் வருவாள் என்று
தெரிந்தால்!

இரு முறைதான்
உனைப் பிடித்திருக்கிறது,
உன்னை அவளூக்கு
பரிசளித்த போதும்,
அவள் எனக்கு
பரிசானபோதும்..!

Series Navigation